திருட்டு 82 - அரசியல் அசிங்கம்
ஜெயலலிதா இறந்தார்
இறக்கவில்லை கொல்லப்பட்டாராம்
ஓ பி எஸ் ராஜினாமா செய்தார்
செய்யவில்லை கட்டாயப்படுத்தப்பட்டாராம்
சசிகலா முதல்வர் ஆக ஆசைப்பட்டார்
ஆசைப்படவில்லை கேட்டுக்கொள்ளப்பட்டாராம்
ஓ பி எஸ் உடன் ஜெயலலிதா ஆன்மா பேசினார்
பேசியது ஜெயலலிதா இல்லை பி ஜே பி ஆம்
ஆளுநர் வேலை நிமித்தம் மகாராஷ்டிரா சென்றார்
சென்றது அரசியல் நிமித்தம் வேலை நிமித்தம் இல்லையாம்
கூவத்தூரில் அ தி மு க எம் எல் ஏ க்கள் சிறையடைப்பு
அடைக்கப்படவில்லை அழைக்கப்பட்டார்களாம்
சிறை செல்லுமுன் ஜெயலலிதா சமாதியில் சசிகலா சபதம் செய்தார்
சபதமில்லை அரசியல் விளையாட்டாம்
சட்டப்பேரவையில் போர்க்களம் - இருக்கைகள் , மைக் சேதம்
சேதம் செய்யவில்லை ரகசிய வாக்கெடுப்புத்தான் கேட்டார்களாம்
அரசியல் அழுக்குத் தெரிகிறது இந்தக் கவிதையில்
அழுக்கு இல்லை அசிங்கமாம் !

Comments
Post a Comment