திருட்டு 86 - இதை மட்டும் செய்ய முடியாது !
செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் அனுப்பலாம்
நிலவில் கால் வைக்கலாம்
அறிவியலால் உலகை உலுக்கலாம்
தொழில்நுட்பம் கொண்டு மாயம் செய்யலாம்
காதலிக்கலாம்
கொலை செய்யலாம்
திருடலாம்
பேசலாம் பாடலாம்
எதையோ நினைக்கலாம்
சித்தாந்தம் உருவாக்கலாம்
கலை படைக்கலாம்
உண்ணலாம் உறங்கலாம்
உடுத்தலாம் நடக்கலாம்
மொக்கை போடலாம்
தவம் செய்யலாம்
வாழலாம்
சாகலாம்
கவிதை எழுதலாம்
இந்த கவிதையைப் படிக்கலாம்
உதவாக் கவிதை எனக் காரி உமிழலாம்
ஆனால்
சும்மா
மட்டும் இருக்க முடியாது
மனிதனால் !

Comments
Post a Comment