திருட்டு 92 - நட்பை முறித்துக்கொள்வோம்!
மூளை ஓரங்களில்
கூடாரம்
போட்டு
என் உள்ளத்தில்
போராட்டம்
நடத்தும்
எண்ணங்களே!
உங்கள்
கனம்
தாங்காமல்
என் உடலும்
சோர்வுறுகிறது
முகத்தின்
மலர்ச்சி
விடுப்பு எடுத்து
வெளியூர் செல்கிறது
உங்களுக்குள் குடும்பம்
நடத்தி
குழந்தைகள் பெற்று
அவைகளையும்
போராட்டத்திற்கு
அழைக்கிறீர்கள்!
என்ன
நியாயம் இது !
நான் அஞ்சும் ஒரே எதிரி
நீங்கள் தான்
என்னால் வெல்ல முடியாத
எதிரி
என் சக்திற்கு அப்பாற்பட்ட
எதிரி
நீங்கள் சொல்லும்
கதைகள்
உண்மையா?
கட்டுக்கதைகளா?
பிரித்தறியும்
ஞானம்
இல்லை எனக்கு
என்னை
விட்டுவிடுங்கள்
கூடாரத்தைக்
கலைத்துவிடுங்கள்
நம்
நட்பை
முறித்துக்கொள்வோம்!

Comments
Post a Comment