திருட்டு 70 - அச்சுப் பிழையோ ?



எமன்

இப்பொழுதெல்லாம்

எருமையில்

பயணிப்பது

இல்லையாம்!


நவீன

தொழில்நுட்பத்திற்கு

'அப்கிரேடு'

ஆகிவிட்டான் !


சாவுச் சங்கு 

ஊதிக்கொண்டே

தினமும்

காவு

வாங்கிக்கொண்டிருக்கிறான்

மும்பை ரயில்களில் !


சத்தமில்லாமல்

சுத்தம்

செய்துக்கொண்டிருக்கிறான்

மனிதத்தை !


என்று

தணியும்

இந்த எம ராஜ்ஜியம் ?

எமலோகத்தில்

இடமில்லை

என்று சொல்லும் வரையா ?


தினசரி

பலிகளை

செய்தித்தாள்களில்

முதல் பக்கத்தில்

வெளியிடும் வரையா ?


தினம்

பத்து பேர்

எமலோகத்தில்

ரயில் பயணச் சீட்டுடன்

சேர்கிறார்களாம்!


பயணச் சீட்டில்

அச்சுப் பிழையோ ?

Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !