திருட்டு 71 - கோலிவுட் டைரியில் என் பக்கம்



கடவுளுக்கு

ஒரு விண்ணப்பம் !


என் வாழ்க்கையின்

இயக்கத்தை

ஷங்கருக்கும்


தயாரிப்பை

கலைப்புலி தாணுவுக்கும்

அளிக்க வேண்டும்


வாழ்வின்

ஒவ்வொரு

தருணத்திற்கும்

பின்னணி இசை

அனிருத் இசைக்கவும்


முக்கிய

விழாக்களுக்கு

வைரமுத்து

வரிகளில்

ஏ ஆர் ரஹ்மான்

பாடல்

இசைக்கவும் வேண்டும்


காதலிக்க

காஜல் அகர்வாலும்

மோதலுக்கு

அரவிந்த் சாமியும்

வேண்டும்


வசனங்களை

இறந்து போன

சுஜாதா

சொர்க்கத்தில் இருந்து

மூளைக்கு

இறக்குமதி

செய்ய வேண்டும்


நடிப்பை

நான்

பார்த்துக்கொள்கிறேன் .


விண்ணப்பம்

சமர்ப்பிக்கப்பட்டது

பரிசீலனைக்குப் பின்

கிடைத்தப் பதில் :

.
.
.
.

விண்ணப்பம்

நிராகரிக்கப்பட்டது

நடிகர் சங்கம் ஏற்கவில்லை !

Comments

Popular posts from this blog

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !