திருட்டு 95 - வாழ்க்கையோடு விளையாடு !



கருவறை மர்மங்கள்

உடையும்

நாள் !


மூன்றாம் மாதம்

மூன்றாம் நாள்

மூன்றாம் நபர்

என் இல்லத்தில்

இணையும்

நாள் !


வரும்

முதல் நொடியிலேயே

பலருக்குப்

பதவிப்பிரமாணம்

செய்யும் நாள் !

அப்பாவாக

அம்மாவாக

தாத்தாவாக

பாட்டியாக

சித்தப்பாவாக

பெரியம்மாவாக



அழுகை இசையின்

பின்னணியோடு

ஒரு வாழ்க்கை

தொடங்கும்

நாள் !


என் வித்தை

சுமந்து

செல்லும்

பொறுப்பை

ஏற்கும்

நாள் !


எங்கள்

உள்ளங்களில்

மகிழ்ச்சியை

ஏற்றும்

நாள் !


இந்நாள்

அந்நாள்

உயிரே !

வரவேற்கிறோம் !

பாசக் கம்பளம் விரித்து

மகிழ்ச்சித் திரவியம் தெளித்து

அக்கறை ஆடை உடுத்தி

உற்சாகக் கெட்டி மேளம் தட்டி

வரவேற்கிறோம் !


இனி

இந்த

உலகம் உன் கையில் !

வா !

வாழ்க்கையோடு விளையாடு !

Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !