திருட்டு 97 - ஒரு பட்டாம்பூச்சியின் சிறகசைவு



புயல் கூட

புறப்படும்

ஒரு

பட்டாம்பூச்சியின்

 சிறகசைவில் !


வாழ்க்கையே

திசை மாறும்

பெண்

பார்வையின்

ஆழ்குழியில் !


பிரசவ வலியும்

மறந்து போகும்

தன்

குழந்தையின்

தரிசனத்தில் !


பேராட்சியும்

கவிழ்ந்து போகும்

ஒரு

குடிமகனின்

வாக்கினில் !


வரலாறும்

முதுகொடியும்

ஒரு

சித்தாந்தத்தின்

அறிமுகத்தில் !


பெருங்காடும்

தீய்ந்து போகும்

ஒரு

தீப்பொறியின்

பிறப்பினில் !


அட !

நான் கூட

கவிஞன் ஆவேன்

ஒரு

பட்டாம்பூச்சியின்

சிறகசைவில் !

Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !