திருட்டு 108 - இளமை ஓ இளமை !
அரும்பு மலராய்
நம்பிக்கையுடன் !
புது வாழ்க்கை
செதுக்க
ஆசையுடன்
ஆயிரம் கற்பனைகள்
ஆயிரம் சாத்தியங்கள்
கனவுகள்
இன்னும் அடிமைகள்
உணர்வுகள்
இன்னும் தலைவர்கள்
இளமை ஓ இளமை
உன்னில்
நடனமாடும் புதுமை
அரும்பு மலராய்
நீ அழகாய்
காத்திருக்கிறாய்
இழக்கும் முன் பறந்துவிடு
விலகும் முன் ருசித்திவிடு
இளமை ஓ இளமை
சாகும் வரை
என்னை அணைத்திடு !

Comments
Post a Comment