திருட்டு 116 - கோடை காலச் சொந்தங்கள்
கோடை காலம்
பகலில்
சூரியன் பெரியப்பா
அவரைக் கண்டுகொள்வதில்லை
என
ஓயாமல் தீ முறைக்க
மாதா மாதம்
தவறாமல்
நலம் விசாரித்துவிட்டுச்
செல்கிறாள்
என் அத்தை மகள்
பௌர்ணமி
பாசக்காரி !
என் மேக மாமாவுக்கும்
அவளுக்கும்
ஒத்து வருவதில்லை
அவள் வரும்போது
இவர் வருவதில்லை
இவர் வரும்போது
அவள் வருவதில்லை
இருந்து விட்டுப் போகட்டும்
அடி பௌர்ணமியே !
நம்
கூட்டுக்குடும்பம்
உடையாமல்
பார்த்துக்கொள்
அடுத்த
அமாவாசை
வரும்வரை !

Comments
Post a Comment