திருட்டு 101 - மஞ்சள் வெயிலே !



நேற்றை

போல்

இன்றில்லை !


மயக்கும்

மஞ்சள் வெயிலின்

மௌனமும்

மௌனத்திற்கு

ஸ்ருதி சேர்க்கும்

காக்கையின் சத்தமும்

நேற்றைய நினைவுகளை

திரையிடுகின்றன !


இன்றைய

வாழ்க்கை

நிச்சயம்

நேற்றைய

நிகழ்வுகளின்

தொடர் அல்ல !


எத்தனை மாற்றங்கள் !

சில நேரங்களில்

நேற்றைய நேரங்களை

விரும்புகிறேன் !


யாரோ ஒருவர்

 வாழ்க்கையின் நிகழ்வுகளாய்

அவை

நினைவுத் திரையில்

தெரிகின்றன !


இந்த

மஞ்சள்

வெயிலின் இதம்

நேற்று

என் வாழ்விற்கு

இதம் கொடுத்த

நிகழ்வுகளைத்

திரையிடுகின்றது !

மனம்

இளகுகிறது!

காக்கையின் கரைதலுக்கு

வணங்குகிறது!


எதையோ

இழந்தது போல்

ஒரு மெல்லிய சோக இழையும்

தெரிகிறது

அந்த  இதங்களுக்கு

நடுவில் !


என்னுடைய

இந்த வாழ்க்கையின் கதையில்

நேற்றை போன்ற

சுகமான தருணங்கள்

இனி

கிடையாதோ

எனத்

தோன்றுகிறது !

மஞ்சள் வெயிலே

எதாவது பேசேன் !

தன்னந்தனியே

உளறிக்கொண்டிருக்கிறேன் !


Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !