Posts

Showing posts from January, 2017

திருட்டு 64 - அமெரிக்காவும் நானும் - கவிதையும் ஹைக்கூவும்

Image
களவாடவில்லை கற்பழிக்கவில்லை கொலை             செய்யவில்லை கொள்கை              பரப்பவில்லை சட்டம்              மீறவில்லை சமாதானம்               குலைக்கவில்லை முஸ்லிமாகப் பிறந்தேன் ! விசா மறுக்கப்பட்டேன் ! -------------------------------------------------- அமெரிக்கத்  தூதரகம் விசா மறுக்கப்பட்டது பெயர் முஹம்மது --------------------------------------------------

திருட்டு 63 - நாளைய விவசாயி

Image
அரசியல்வியாதியில் தூங்கும் அரசியல்வாதிகளே ! தேவை இல்லை எனக்கு, இனி உங்கள் உதவி! மழையில்லாமல் இனி நான் தற்கொலை செய்யேன் ! நிலமில்லாமல் இனி நான் விரக்தி அடையேன் !                                                                                                           என் கூட்டாளி தொழில் நுட்பம் இருக்கிறான் உதவி செய்ய! என் ஆலோசகன் விஞ்ஞானம் இருக்கிறான் அறிவுரை வழங்க! துல்லிய பண்ணை விவசாயம் பல்லடுக்கு விவசாயம் மண்ணில்லா விவசாயம் என விவசாயத்தின் புதுமுகங்களை முத்தமிடுவேன் ! நவீனத்தோடு கைகோர்த்து என் வயிற்றையும் என் தாய்நாட்டின் வயிற்றையும் நிரப்புவேன் ! தொழில்நுட்பமே இனி என் தலைவன் ! சரி ! போனால் போகட்டும் நிரப்பித் தொலைகிறேன்! உங்கள் வயிற்றையும்! https://en.wikipedia.org/wiki/Hydroponics https://en.wikipedia.org/wiki/Vertical_farming https://en.wikipedia.org/wiki/Precision_agriculture

திருட்டு 62 - கறுப்பின் கதறல்

Image
கறுப்பு நிறம் கதறிக்  கதறி அழுது கொண்டிருந்தது குடிமகன் வரி கட்டாத பணத்திற்கும் அரசியல்வாதி வாங்கிய ஊழல் பணத்திற்கும் தன்னை சாட்சிக்கு அழைத்ததற்கு!

திருட்டு 61 - ஆண்மைக்குறைவு

Image
அந்தப் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டாள் . கற்பழித்து தம் கற்பிழந்த இந்த பொட்டை ஆண்மகன்களுக்கு எப்படி ஏற்பட்டது இந்த ஆண்மைக்குறைவு ? இந்த நோய்க்கு மருந்து உண்டோ ? அரபு நாடுகளில் ஒரு மருந்து இருப்பதாகச் செய்தி ! உடனே இறக்குமதி செய்ய இந்திய அரசுக்கு விண்ணப்பிக்கிறேன் !

திருட்டு 60 - நடுத்தர வர்க்கம்

Image
பாரதப் பெண்ணிடம் அன்று யாரவது சொல்லியிருக்கலாம்! செல்வச் செழிப்பு பிறர் கண்ணுக்குத் தெரியும்படி அலங்காரம் செய்யாதே என்று! ஆங்கிலக் கள்வன் வந்து சூறையாடிச்  சென்று விட்டான்! செல்வத்தை இழந்த விரக்தியில் நேரு மாமா அவளைக் கண்டிப்போடு வளர்த்தார் மனதிற்குள் புழுங்கிக்கொண்டே ஏழையாய் கழியும் தன் வாழ்க்கை என ஏங்கிக் கொண்டிருந்தாள்  நல்ல வேளை தாத்தா நரசிம்ம ராவ் அவளுக்கு விடிவு காலம் கொண்டு வந்தார் செல்வ அறையின்  சாவியை அவள் கையில் கொடுத்தார் அன்று முதல் பாரதப் பெண் செல்வத்தைச் சேர்க்க ஆரம்பித்தாள் கல்வி ஏணி கொடுத்து தன் ஏழைக் குழந்தைகளை நடுத்தர வர்க்கத்திற்கு ஏற்றிக் கொண்டிருக்கிறாள் நானும் அந்த ஏணியில் ஏறியவன்தான்.. நடுத்தர வர்க்கம்!

திருட்டு 59 - புதுக்கவிதை

Image
சுத்தத் தமிழில் ஒரு கவிதை எழுத தமிழ்த்தாயிடம் சென்றேன் அவள் அடி என்றாள் அசை என்றாள் சீர் என்றாள் தளை  என்றாள் தொடை என்றாள் பா என்றாள் விருத்தம் என்றாள் வாய்ப்பாடு என்றாள் புறமுதுகு காட்டி ஓடி வந்தேன் தமிழ்க் காதலியிடம்! புதுக்கவிதைப்                    படித்தேன் கட்டி அணைத்து            முத்தமிட்டாள் !

திருட்டு 58 - அசைவுகள்

Image
கீழ்க்கண்ட அசைவுகளில் கவிதை ஒளிந்திருப்பதாகத் தகவல்:                                தாயின் கருப்பையில் சேயின் அசைவு                                தென்றல் முட்டியதில் பூவின் அசைவு                                காதலி கண்களின் கருவிழி அசைவு                                கட்டழகுப் பெண்ணின் கட்டுடல் அசைவு                                நிலவின் கட்டளையில் கடலலை அசைவு                                குட்டிக் குழந்தையின் பிஞ்சு விரல் அசைவு                                 அசையாமல் அசையும் இசையின் அசைவு அத்தனை அசைவுகளுக்கும் ஒரு எச்சரிக்கை ! அசையாமல் இருங்கள் உங்களைத் திருட வருகிறேன்!

திருட்டு 57 - தருணம்

Image
இந்தக்                    கவிதையை இந்த                   வார்த்தையை இந் த                      எழுத்தை எழுதிய இத்தருணம் முடிந்துவிட்டது. முடிந்துவிட்ட வாழ்க்கையின் தருணங்களை காலத்தின் அலமாரியில் அடுக்கி  வைக்கிறேன் முதுமையின் தருணத்தில் ரசிக்க அத்தருணம் எப்படி இருக்கும்? ஆவலோடு இத்தருணம் விடைபெறுகிறேன், கவித்திருடன் 

திருட்டு 56 - சிறைக்குள் சுதந்திரம்

Image
சில சிறைகளில் விடுதலைக் கிடைப்பதற்கு வாய்ப்புகளே இல்லை ஆணாதிக்கச் சிறையில் இருந்து பலப் பெண்களுக்கு தீராத நோயின் சிறையில் இருந்து நோயாளிக்கு தாளாத முதுமையின் சிறையில் இருந்து கிழவருக்கு  இந்த ஆயுள்கைதிகளுக்கு சிறைக்குள் என்ன சுதந்திரத்தைக் கொடுக்கலாம் ?

திருட்டு 55 - இலையுதிர் காலம்

Image
போதும் ! எவ்வளவு காலம் தான் எங்கள் பாரத்தைச் சுமந்துக் கொண்டிருப்பாய் ? கொஞ்சக் காலமாவது உனக்கென்றுச் செலவிடு !                                                                                                                             தாய் மரத்திடம்                                                                                                                                              சொல்லி                                                                                                                                     தற்கொலை                                                                                                                                            செய்தன                                                                                                                 இலைப் பிள்ளைகள்.

திருட்டு 54 - அன்றும் இன்றும்

Image
சுற்றும் பம்பரத்தை இரு விரலால் உள்ளங்கையில் ஏற்றியது                                                                                                                                        இரு முறை                                                                                                                                                                                                                                                       தண்டாவை                                                                                                                          கில்லியால் தட்டி                                                                                                                        தூரத்தில் அடித்து                                                                                                                                     இரு மடங்கு                                                                                                        

திருட்டு 53 - பொறுப்பில்லாத சூரியன்

Image
மேகங்களுக்கிடையே ஏதோ குடும்பத் தகராறாம்! முட்டி  மோதிக் கொள்கின்றன இடிச்  சத்தம் காதைப் பிளக்கிறது! வன்முறை தாளாமல் வானமகள் மழைக் கண்ணீர் வடிக்கிறாள்! ஏன் இந்த வன்முறை என்று கேட்டால் மின்னல் வாளைக் காட்டி மிரட்டுகிறார்கள்! எங்கே போனான் இந்த பொறுப்பில்லாத சூரியன் ?

திருட்டு 52 - ஜல்லிக்கட்டுக் கவிதைகள்

Image
 வங்கக் கடலில் பொறாமை அலைகள் மெரினா கடற்கரையில் ஒரு இளைய கடல் உருவானதென்று ! ....                                                                                                                     சிக்கன் பிரியாணி                                                                                                                     மட்டன் பிரியாணி                                                                                                                        பன்றி பிரியாணி                                                                                                                தடை செய்தாயா நீ ?                                                                                                                              பீட்டா !                                                                                                 காளையை அடக்க மட்டும்                                                                                                   ஏன் குரல்

திருட்டு 51 - ஒரு ரகசிய ஒப்பந்தம்

Image
நாற்சந்தி சிவப்பு விளக்கு  காவலர் இல்லை குறுக்கே  வண்டி வரவில்லை ஒரு  கையில் சட்டம் மறு  கையில் வேகம் காத்திருந்த வாகன ஓட்டிகள் நிறைவேற்றினர் ஒரு ரகசிய ஒப்பந்தம்

திருட்டு 50 - சமர்ப்பணம்

Image
கள்ளா என அழைத்து எனக்கு முதலில் திருடன் அங்கீகாரம் கொடுத்தவள் நான் திருடியக் கவிதைகளைப் பதம் பார்த்துக் கத்தரிப்பவள் அக்கறை ஒளிவிளக்கு ஏந்தி என் உடல் படகையும் மனக் கடலையும் இல்லறக் கரையில் உட்கார்ந்துக் கவனிப்பவள் காதல்  தீபம் ஏந்தி என் வாழ்க்கையில் ஒளி சேர்ப்பவள் அவளுக்கு இந்த ஐம்பதாம் திருட்டு சமர்ப்பணம் தமிழ்த் தாய்க்கு மட்டுமல்ல என் திருட்டில் உனக்கும் பங்களிக்கிறேன் துணையே வா ! நம் பயணம் தொடர்வோம் !

திருட்டு 49 - மாற்றத்தின் முதுகில்

Image
அழகிய விடியலில்                அனுதினம் திளைத்திட புது புது கனவுகள்                தினம் தினம் உருப்பெற விருப்பம்  தான் ! ஆனால் ... மறுபடி மறுபடி மாற்றங்கள் முறைத்திட தருமடி தருமடி முதுகினில் வலித்திட எழுந்தேன் ! அழகிய விடியலோ              அசைத்திடும் புயலோ புது புது கனவோ                மனம் நெருடும் நிகழ்வோ அதுவோ இதுவோ நடுநிலை வகிப்பேன் மாற்றத்தின் முதுகில் என் பயணம் தொடர்வேன் !

திருட்டு 48 - கவித்திருடன் கைதானான்

Image
கைதானேன் ! கவிதைகளைத்  திருடிய குற்றத்திற்காக , யாப்புக்குள்                கவிதைகளை                 அடக்காததால் காப்புக்குள்                என் கைகளை                 இட்டு இழுத்துச் சென்றனர் நீதிமன்றத்தில் நீதி விசாரணை நீதிபதி குற்றத்தைப் பட்டியலிட்டார் 'கவிதைகளைத் திருடியது'                                              முதல் குற்றம் 'கவிதைப்  பொதுச்  சொத்து' என்றேன் 'உன் கவிதையில் இலக்கணம் இல்லை '                                              இரண்டாம் குற்றம் 'என் கவிதைக்கு                                        இலக்கு உண்டு                                                                               கனம் உண்டு                                       இலக்கணம் தேவையில்லை  ' என்றேன் திருடிய பொருளைத் திருப்பிக் கேட்டார் 'படித்தவர் மனதில்                  பதிந்துவிட்டது  முடியாது' என்றேன் 'கர்வம் உனக்கு'                   என்றார் 'கவிஞனுக்கு  இயல்பு'        

திருட்டு 47 - என் வீட்டு லில்லிச் செடி

Image
முன்பு பூத்தது  அந்தக் கிராமத்துக் கிழவி சொன்னாள் பூப்பெய்தப்  பெண் ஆண்களிடம் சிரித்துப் பேசக்கூடாது என்று என் வீட்டு லில்லிச் செடி இப்போதெல்லாம் பூக்கள் விரித்துச் சிரிப்பதில்லை . . . பூப்பெய்துவிட்டதோ ?

திருட்டு 46 - சிலேடைக் குறும்புகள்

Image
பகலில் கறுப்பாகும் மூக்குக்கண்ணாடி எதற்கு என்றேன் நண்பனிடம் 'கண்ணுக்குக்   குளிர்ச்சி' என்றான் தூரத்தில் அழகு மங்கைகளைப் பார்த்துக்கொண்டே ! ---------------------------------------------------------------------------- வேலைக்குப்  புறப்படும் அவசர நேரம் ... ' தூக்கிக் கொண்டுப் போ' வீட்டு வேலையில் களைத்த மனைவி சொன்னால் கணவனிடம் 'தூக்கிக் கொண்டுப்  போகிறேன்' சொன்னான் கணவன் சாப்பாட்டுத் தூக்கியைத் தூக்கிக் கொண்டு ! --------------------------------------------------------------------------------- சுவரில் ஓடிய பல்லியை ஓட்டச் சொன்னான்  படுத்திருந்த நண்பன் 'நீயெல்லாம் ஒரு பல்லியா!' ஓட்டினான் தோழன் பல்லியைப் பார்த்துக்கொண்டே !

திருட்டு 45 - இது மனிதக் காதல் அல்ல

Image
நீலக்கடல் உடை அணிந்திருந்தும் அங்கங்கே  நில உடலைக் காட்டி சூரியனை வசீகரிக்கிறாள்! பூமி ஒரு கவர்ச்சிப் பெண் ! சூரியன் மட்டும் என்னச் சளைத்தவனா ? தன் வசீகரத்தால் காலங்காலமாய் பூமியை வளைத்து இழுத்துக் கொண்டிருக்கிறான் ! விடியற்காலையிலேயே விழித்திடுவான் பூமியைப் பார்க்க ! இவர்கள் காதலில் ஒரு சோகம் ! தன்  காதலியை           அணைத்தால் , தீ முத்தம்              கொடுத்தால் , அவள்              இறப்பாள் அறிவான்              சூரிய மன்மதன் ! எத்தனையோ கோள்கள் அவனைச் சுற்றியும் பூமிப்  பெண்ணின் மீதே அவனுக்குக் காதல் ! ஒளியால் அவளைக்  கர்ப்பிணி ஆக்கினான் ! மனித குழந்தைகள் படைத்தான் ! மனிதக் காதல் அழியும் மனிதம் அழியும் இவர்கள் காதல் வாழும் உலகம் முடியும் இது மனிதக் காதல் அல்ல ! அது சரி , இதைக் கேட்டீர்களா ? பூமிப் பெண்ணை நிலா மகன் சுற்றி வருகிறானாம்  !  அடடே இது ஒரு முக்கோணக் காதல் கதை !  இல்லை இல்லை ஒரு முக்கோணக் காதல் கவிதை !

திருட்டு 44 - கட்டாயத் திருமணம்

Image
மெழுகுக்கும் நெருப்புக்கும் தீக்குச்சி செய்து வைத்தது கட்டயாத் திருமணமோ ? எப்பதான் வான் வீட்டுக்குச் செல்வேன் எனத் துடிக்கிறாள் நெருப்பு ! கரைந்து கரைந்து  தன்னையே அழித்துக்கொள்கிறான் மெழுகு !

திருட்டு 43 - ஈ

Image
பொறாமையோ என்னமோ பல கண்கள் கொண்ட உன்னை இரு கண்கள் கொண்டத் தமிழன் ஓரு எழுத்தால் பெயரிட்டான் !

திருட்டு 42 - எதுகை அழுகை

Image
                ( மனம் உடைந்தப் பெண் இறைவனிடம் வேண்டுகிறாள் ) சாய்ந்திருக்கத்  தோள் வேண்டும் மாய்ந்துப்  போவேன் இல்லையெனில் - எனக் காய்ந்துப்  போன என்னுள்ளம் சேய் போல அழுகிறது வான தேவன் உனை நோக்கி தானம் வழங்க வேண்டுகிறேன் கானல் திரியும் உள்ளத்தில் பானம்  ஊற்றி இளைப்பாற்றும் இரத்தக் கண்ணீர் வடிக்கின்றேன் இரக்கம் வேண்டி அழுகின்றேன் கரம் குவித்து வணங்குகின்றேன் தரமற்ற வாழ்வை வளமாக்கும் அழுவதற்குக் கண்ணீர் இல்லை எழுவதற்குத் துணிச்சல் இல்லை தழுவுதற்குக் கைகள் இல்லை விழுந்த என்னைத் தூக்கி விடும் புரிந்துக் கொள்ள யாருமில்லை - எனைத் தெரிந்துக் கொள்ள யாருமில்லை பரிந்துப்  பேச யாருமில்லை - என  விரக்தி அடைந்து அழுகின்றேன் சாய்ந்திருக்கத்  தோள் வேண்டும் மாய்ந்துப் போவேன் இல்லையெனில் - எனக் காய்ந்துப் போன என்னுள்ளம் சேய் போல அழுகிறது

திருட்டு 41 - காலப் பயணம்

Image
விவாதம் தேவையில்லை காலப் பயணம் சாத்தியம் தான் ஒரே ஒரு புகைப்படம் போதும் நினைவுக்  குதிரையில் ஏறி கடந்தக் காலத்தை அடைய !

திருட்டு 40 - இரட்டைக் கிளவி

Image
சல சல  சலங்கை ஓசை கல கல சிரிப்புச் சத்தம் பட பட நெஞ்சம் துடிக்க கட கட கதவைத் திறக்க தள தள மங்கை ஒருத்தி பள பள பற்கள் காட்ட தக தக நடனம் ஆட குளு குளு குளிரும் வாட்ட திரு திரு கண்கள் முழிக்க விறு விறு பேயும் நெருங்க கனவு கலைந்தது தமிழ் ஆசான் நேற்றுச் சொன்ன இரட்டைக்  கிளவியின் விளைவுப் புரிந்தது !

திருட்டு 39 - அருவி

Image
நரைத்தக் கூந்தல் என்றாலும் உன் அழகு குறையவில்லை ! காலங்காலமாய் ஓடினாலும் உன் கால்கள் தளரவில்லை! மலைக் கணவனை மணந்தும் பார்ப்பவரை வசீகரிப்பதை நிறுத்தவில்லை ! ஆற்றுக்  குழந்தையை பிரசவித்தும் உன் இளமை குறையவில்லை ! இத்தனை  இருந்தும் நதியாய் கடலோடு கலக்கும்போது மட்டும்  காணாமல் போய்விட்டாயே !

திருட்டு 38 - கண்ணாமூச்சி ஆட்டம்

Image
வெட்கத்தில் வான் திரையால் முகம் மறைக்க ஆரம்பிக்கிறாய்             பௌர்ணமிக்குப் பின் வெட்கம் களைந்து வான் திரை நீக்கி முகம் காட்ட ஆரம்பிக்கிறாய்               அமாவாசைக்குப் பின் திரை மூடியும் திரை நீக்கியும் சூரியனோடு என்ன காதல் விளையாட்டா ? இல்லை மனிதர்களோடு கண்ணாமூச்சி  ஆட்டமா?

திருட்டு 37 - சுதந்திரம்

Image
அனுமதி இல்லாமல் தினமும் என் வீட்டுக்குள் நுழைகிறான் சூரியத் திருடன் ... எல்லாம் ஜன்னல் கொடுத்த சுதந்திரம் !

திருட்டு 36 - ஒரு குட்டி ஆசை

Image
ஒரு குட்டிக்  குடும்பம் ஒரு குட்டி வீடு ஒரு குட்டி வாழ்க்கை                          போதும் .

திருட்டு 35 - கருவறை மர்மங்கள்

Image
எத்தனை  மர்மங்கள்                   உனக்குள் ஒளித்து வைத்துள்ளாய் ! ஆணோ        பெண்ணோ கறுப்போ               சிவப்போ அம்மா சாயலோ                              அப்பா சாயலோ...                                                                                                                மர்மங்கள் உடையும்                                                                                                                                  நாளுக்காய்க்                                                                                                                      காத்திருக்கிறோம்   அன்புடன் ,   அம்மாவும் , அப்பாவும்                          

திருட்டு 34 - கவிதைக்கு விடுமுறை

Image
இன்று புத்தாண்டு அல்லவா நான் திருடுவதாக இல்லை என் கவிதைத் திருட்டுக்கு இன்று விடுமுறை நாளை சந்திப்போம் ...