Posts

Showing posts from 2023

திருட்டு 131 - மழையின் மொழி

Image
  அடித்துப் பெய்கிறது  மழை ! காரில் என் மகளை  பள்ளியில் விட்டு வருகிறேன்  வகுப்பு வாசல் வரை  குடை பிடித்து ஒரு துளி மழை கூட  தீண்டாமல்  வழியில்  ஒரு சிறுவன்  ஒற்றைக் கையில் குடையுடன்  ஒற்றைக் கையால்  மிதி வண்டி பிடித்து  மிதித்து  பள்ளிக்குச் செல்கிறான்  நகர்கிறேன்  காரில்  மழையில் நனையாமல்  மீண்டிம் வழியில்  ஒரு சிறுமி  மொத்தமாய்  மழையில் நனைந்து  உற்சாகமாய்  செல்கிறாள் பள்ளிக்கு  சொந்தமாய் மழையை அரவணைத்து! மழை பேசும் மொழி ஒன்றுதான்  மழையோடு  இவர்கள் பேசும் மொழி ?

திருட்டு 130 - காட்சிப் பிழை

Image
  இரு வெள்ளை வெல்லத்துண்டுகள்  எடுத்துச் செதுக்கி  நட்டாற் போல்  இருக்கிறது  இவன் கீழ் அடுக்கு  பால் பற்கள் இரண்டும் ! ரசனை மயக்ககத்தில்  இருந்த என் விரலை வாங்கி  நறுக்கென  கடித்தான் , தெரிந்தது  அவை  நங்கூரம் என்று !

திருட்டு 129 - உறுப்பினர் பதவி

Image
  அத்தா  அத்தா  என அழைக்கிறான்  என் கைக்குழந்தை  தன் அக்காவை ! ‘க’ கரம்  கடுப்பானது ! ‘த’ கரத்தின் மீது  பொறாமை கொண்டது ! இவன் மழலை இசையில்  உறுப்பினர் பதவி  பறிபோனதால் !

திருட்டு 128 - மறந்தே போனேன் !

Image
  எழுத்துக்களை  வைத்துத் தைத்து  ஒரு குட்டிக் கவிதை ஆடை  செய்தேன்  உனக்காக ! என் குட்டிப் பயலே  வா போட்டு விடுகிறேன்  அய்யய்யயோ ! மறந்தே போனேன் ! உனக்கு ஆடை அணிவதே பிடிக்காதென்பதை !

திருட்டு 127 - மருத்துவமனை பெயர் குறிப்புத் தருக

Image
  உணர்வுகளின் உச்சங்கள்  உலவும் இடம்  இங்கே இந்த மூலையில்  அழுகை  அடிபட்ட கணவன்  அவசர சிகிச்சையில்  அழுகிறாள் மனைவி  அதோ அந்த மூலையில்  மகிழ்ச்சி  புதிதாய் ஒரு உயிர்  பிறந்த கையோடு  அப்பா அம்மா தாத்தா பாட்டி  என பல  உறவுகளைக் கொண்டு  வந்த  வரவில்  அலைகிறது  இதோ இந்த பக்கம்  வலி  அவசர சிகிச்சையில்  அந்த  கணவனின் வலி  அதோ அந்தப் பக்கம்  கவலை  வாலிபம் புற முதுகு காட்ட  வயோதிகம்  கூடவே கொண்டு வந்த  சக்கரை நோயை  நினைத்து  வருந்துகிறான்  வாலிப முதியோன்  இதோ இந்த இடுக்கில்  சிரிப்பு  மருத்துவமனை ஊழியர்கள் தங்களுக்குள்  பிடித்து விளையாடும்  நகைச்சுவையில்  அலைகிறது  இங்கே இந்த இடத்தில்  அலுப்பு  ஒரே வேலையை காலங்காலமாய்  செய்து  அலுத்துப் போய்  உர்ரென்று  அந்த மருத்துவ நிர்வாகியின்  முகத்தில்  அலைகிறது  இங்கே இங்கே  இந்தப் பக்கம்  நேராக பாருங்கள்  என்னை தான்  என் முகத்திலும்  உலவுகிறது பாருங்கள்  எதிர்பார்ப்பு  என் இரண்டாவது  குழந்தையின்  வருகைக்காய்  நான் காத்திருக்கும்   மருத்துவ அறையில்  நுழைந்து  என் இதயத்திலும்  நுழைந்திருக்கிறது  கரிசனை  அப்பாவையும் அம்மாவையும்  பிரிந்திருக்கும்  என் மூத்த