Posts

Showing posts from 2022

திருட்டு 126 - கள்ளக் காதல்

Image
என் கணவனுக்கு  வஞ்சரம் மீது காதல்  மனைவியாய்  இருந்தும்  ஆமோதிக்கிறேன்  இந்தக்  கள்ளக்  காதலுக்கு ! 

திருட்டு 125 - வானிலை அறிக்கை

Image
     அடித்துப்  பெய்கிறது           மழை  பிடித்துப் பிழிகிறது            குளிர்  சூடான தேநீர்  கார சார பஜ்ஜி ! 

திருட்டு 124 - வாழ்க்கை

  அன்றாட  அலுவல்களின்  இடுக்குகளில்  நுழைந்து ஓடுகிறது  பிடி .... பிடி ... பிடி ....

திருட்டு 123 - வேப்பம் பூ

Image
  என்ன நீ  எப்போதும்  ஏப்ரல் மாதமாய்  வருகிறாய் ! கோடை விடுமுறையில்  வரும்  விருந்தாளி போல !

திருட்டு 122 - சுதந்திரத் தாகம்

இறப்பின் விளிம்பில்  படுக்கையில் கிடந்தவள்  விழைந்தாள்  எழுந்து நிற்க  தூக்கி நிறுத்தின  நான்கு கைகள்  புற்று பற்றிய உடம்பை  நின்றாள்  படுத்தாள்  கண் மூடித் தூங்கினாள்  சுதந்திரத் துளிகள்  அருந்திய களிப்பில்  தூக்கத்திடம்  ஒப்பந்தம் செய்தது மரணம்  பட்ட துன்பம் போதும்  அழைத்துக்  கொள்கிறேன் என்று