Posts

Showing posts from 2019

திருட்டு 118 - காணவில்லை

Image
ஒரு சில நாட்களாய் சென்னையில் வானத்தைக் காணவில்லை ! அடையாளம் : பகலில் நீலச் சட்டை அணிந்திருப்பான் கூடவே சூரியனும் சுற்றிக்கொண்டிருப்பான் இரவில் கருப்பு நிறச் சட்டை அணித்திருப்பான் நிலவோடு உலா செல்வான் கிடைத்தத் தகவல் : பூமி பிடித்த புகையில் மூச்சுத் திணறி ஓடியதாகச் செய்தி ! தகவல் தருவோருக்கு ஆரோக்கியமான  வாழ்க்கை சன்மானமாகத் தரப்படும் !

திருட்டு 117 - இதயம் விழிப்பாளோ ?

Image
மூளை வருத்தப்படுகிறது இதயம் தூங்குகிறது என்று உயிர் கொடுத்தவள் வாழ விழி கொடுத்தவள் சோர்வாய் தலை சாய்த்துத் தூங்குகிறாள் எழும்ப வலு இன்றி பொறுப்புகளின் சுமையை மூளையிடம் கொடுத்துவிட்டு தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தூங்குகிறாள் மூளை நடத்தும் வாழ்க்கை ஓட்டம் தொடர்கிறது நடை பிணமாய் மனிதன் ரோபோவாக ரோபோ மனிதனாக இதயம் விழிப்பாளோ ?

திருட்டு 116 - கோடை காலச் சொந்தங்கள்

Image
கோடை காலம்  பகலில்  சூரியன் பெரியப்பா  அவரைக் கண்டுகொள்வதில்லை  என  ஓயாமல் தீ முறைக்க  மாதா  மாதம்  தவறாமல்  நலம் விசாரித்துவிட்டுச்  செல்கிறாள்  என் அத்தை மகள்  பௌர்ணமி  பாசக்காரி ! என் மேக மாமாவுக்கும்  அவளுக்கும்  ஒத்து வருவதில்லை  அவள் வரும்போது  இவர் வருவதில்லை  இவர் வரும்போது  அவள் வருவதில்லை  இருந்து விட்டுப் போகட்டும்  அடி  பௌர்ணமியே ! நம்  கூட்டுக்குடும்பம்  உடையாமல்  பார்த்துக்கொள்  அடுத்த  அமாவாசை  வரும்வரை !

திருட்டு 115 - காற்றின் உருவம்

Image
குறுஞ்சியிடம் கேட்டுப்பார்த்தேன்  மருதத்திடம் மன்றாடினேன்  முல்லையிடம் முறையிட்டேன்  நெய்தலிடமும் கேட்டுவிட்டேன்  யாரும் கொடுப்பதாய் இல்லை  வெட்டி நிலம் பாலைவனம்  அதில்  சோகத்துடன் ஒரு உலா சென்றேன்  கிடைத்தது ! எனக்கும் ஓர் உருவம் !