Posts

Showing posts from 2018

திருட்டு 114 - முள்ளும் மலரும்

Image
வெறுமையைத் திரையிடும் தோற்றுப்போன தத்துவங்கள் உயிரைத்  துச்சமென எச்சிலாய்த்  துப்பும் இயற்கையின் வேதனைகள் மனிதத்தை மதிக்காத மிருகத்தின் இச்சைகள் முட்களின் பாரம் வலிக்கிறது                                                                                          கவிதை பேசும்                                                                                          இயற்கை ஓவியங்கள்                                                                                          மகிழ்ச்சிக்கு விரிவுரை                                                                                          சொல்லும் மழலையின்                                                                                           மந்திரங்கள்                                                                                                         அசாத்தியம் பேசும்                                                                                            இளமையின் உத்வேகங்கள்                        

திருட்டு 113 - இது தான் சமாச்சாரமா ?

Image
புரிகிறது  வெள்ளை நிறம்  ஏன்  நெஞ்சு நிமிர்த்தி  கர்வமாய்த்  திரிகிறது என்று! உன் அழகின் அடையாளமாய்  அங்கீகாரம் அடைந்தது கண்டு  தெரிகிறது மென்மை  ஏன்  தன்னிலை மறந்து  வானுக்கும் மண்ணுக்கும்  துள்ளுகிறது என்று ! உன்  அழகின் கணக்கில்  சேர்ந்து  கூட்டலோடும் பெருக்கலோடும்  உறவாட  வாய்ப்புக்  கிடைத்ததைக் கண்டு  விளங்குகிறது  வேகமாய் நகரும்  வாழ்க்கை  ஏன்  வெட்கிக் குனிந்து  நிற்கிறது என்று ! மெதுவாய் மெத்தனமாய்  நீ நகர்ந்து  அதை நகைப்பதை உணர்ந்து  உணர்கிறது  உன் போல்  பறவை இனம்  எதற்காக  பூமியில் உலவுகிறது என்று ! இது போன்ற  கவிதை  கரு உரு கொண்டு  உன்னை ரசிக்க வேண்டும் என்று !

திருட்டு 112 - வெட்கமில்லா வெட்கம்

Image
வெட்கம் தன் வெட்கம் விட்டு உன் பக்கம் சுற்றும் அழகைக் கண்டு என் பக்கம் ஒரு முரட்டு குத்து குத்துகிறது கவிதை இன்னும் இதற்கு ஏன் கவி உருவம் கொடுக்கவில்லை என்று வலி தாங்காமல் எழுதுகிறேன் இக்கவிதையை பாரம் தாங்காமல் ஏற்றி விடுகிறேன் கவிதை வண்டியில் அழகு வெட்கமே உனக்கு போதுமோ இந்தக் குட்டி கவிதை ஆடை ? உடல் அம்மணம் இன்னும் வெட்கம் தரவில்லையே உனக்கு ! எதற்கு ஆடை ! அய்யோ என் கவிதையும் வெட்கப்படுகிறது !