திருட்டு 116 - கோடை காலச் சொந்தங்கள்
கோடை காலம் பகலில் சூரியன் பெரியப்பா அவரைக் கண்டுகொள்வதில்லை என ஓயாமல் தீ முறைக்க மாதா மாதம் தவறாமல் நலம் விசாரித்துவிட்டுச் செல்கிறாள் என் அத்தை மகள் பௌர்ணமி பாசக்காரி ! என் மேக மாமாவுக்கும் அவளுக்கும் ஒத்து வருவதில்லை அவள் வரும்போது இவர் வருவதில்லை இவர் வரும்போது அவள் வருவதில்லை இருந்து விட்டுப் போகட்டும் அடி பௌர்ணமியே ! நம் கூட்டுக்குடும்பம் உடையாமல் பார்த்துக்கொள் அடுத்த அமாவாசை வரும்வரை !