Posts

Showing posts from February 15, 2020

திருட்டு 120 - மாறா

Image
நேற்றும் கழிந்த மாதமும் கழிந்த வருடமும் கழிந்த நூற்றாண்டும் கழிந்த யுகங்களும் இன்றும் நாளையும் இனி பூமி உள்ள வரையும் ஒரே ஒலியை ஒரே மொழியை பேசிக்  கொண்டிருக்கிறாய் பேசிக் கொண்டிருப்பாய் உடல் வருடும் மயில் இறகாய் மனம் வருடும் இசையுடன் மாற்றங்களின் சத்தத்தில் நீ மட்டும் மாறாமல் கடலே! உனக்கு ஒரு பெயர் சூட்டுகிறேன் மாறா ! பிடித்திருக்கிறதா ? அதற்கும் அதே அலை ஓசை பதில்தானா ? மாறா !

திருட்டு 119 - முட்டாள்

Image
சிறைக்குள் அடைபட்டிருக்கும் என்னிடம் கேட்கிறாய் விடுதலைக்கு என்ன வழி  என்று !