Posts

Showing posts from December, 2016

திருட்டு 33 - களம்

Image
மல்யுத்த வீரனுக்கு                         மல்யுத்தக்  களம் சொல்வித்த வீரனுக்கு                        மேடை களம் விளையாட்டு வீரனுக்கு                        மைதானம் களம் மென்பொருள் வல்லுனனுக்கு                         கணினி களம் கட்டட வல்லுனனுக்கு                                                  கட்டடம் களம் கவிஞனுக்கு ஏது  களம் ? கற்பனையே களம்  !

திருட்டு 32 - திகில்

Image
நடு  இரவு நாய் ஊளையிடுகிறது ஊஞ்சல் சத்தம்

திருட்டு 31 - அழகு மொழி

Image
ரோஜா பூவே ! உன்னிடம் சில கேள்விகள்  உனக்கு  நாங்கள் வைத்த  பெயர் ரோஜா  இயற்பெயர் என்னவோ ? காதல் சின்னமே  உனக்கும் காதல் வந்ததுண்டோ ? எதைக்  கேட்டாலும்  ஏன் மௌனம் சாதிக்கிறாய் ? இந்த கேள்விக்கும் மௌனமா ? புரிந்தது ! நான் என் மொழியில் கேட்கிறேன்  நீ உன் மொழியில் பதில் சொல்கிறாய்  அப்படித்தானே ?

திருட்டு 30 - முரண்

Image
நாட்கள்                   நடந்துச் செல்கின்றன! வருடங்கள்                   ஓடிச் செல்கின்றன! வாழ்க்கைப்                   பறந்துச் செல்கிறது !

திருட்டு 29 - நிழலின் வருத்தம்

Image
வெளிச்சம்  என் தாய், இருந்தும் அவள் என்னைத்   தொடுவதில்லை ஏன் ? நான் கறுப்பாய் இருப்பதாலோ ?

திருட்டு 28 - குட்டித் தூக்கம்

Image
யார் சொன்னார்? சொர்க்கம் மண்ணில் இல்லையென்று போடுங்கள் ஒரு குட்டித் தூக்கம் ! எண்ணக் குமுறல்கள் பேச்சிழக்க யோசனை வேண்டுமா? போடுங்கள் ஒரு குட்டித்  தூக்கம் ! இதயத்தின் கனத்தை இறக்க குறுக்கு வழிச் சொல்லட்டுமா? போடுங்கள் ஒரு குட்டித் தூக்கம் ! மதியம் உண்டுக்  களித்த பிரியாணியின் சுவையை முழுவதும் அனுபவிக்க வேண்டுமா? போடுங்கள் ஒரு குட்டித் தூக்கம் ! ------------------------------------ சோம்பல் ஞாயிறு சாப்பாட்டுக்குப் பின் குட்டித் தூக்கம் சுகம் ----------------------------------------

திருட்டு 27 - ஏ டி எம் வாசலிலே ...

Image
கறுப்புப்  பணமும்                   வரவில்லை வெளியே! வெள்ளைப்  பணமும்                    வரவில்லை வெளியே! நாங்கள் மட்டும்                    நிற்கிறோம் வெளியே !

திருட்டு 26 - கவிதைப் போர்

Image
அவள் மனதைத் தோற்கடிக்க கவிதைப் போர் ஒன்றைத் தொடுத்தேன்! சொற்கள் படைத் திரட்டி அவள் மனக்கோட்டை நெருங்கினேன்! கவிதைக் குண்டு நான் வீச அவள் கோட்டைச் சுவர் உடைந்தது! கவிதை அம்பு நான் எய்த அவள் எண்ணச் சிப்பாய்கள் மாண்டன! கவிதை வாள் நான் வீச அவள் கோபக் கணைகள் தகர்ந்தன! வெற்றி பெற்றச் செருக்குடன் அவள் பார்வைத் தீண்ட விரைந்தேன்! முறைத்தாள்! எவனுக்கும் எதற்கும் தான் அடிமை இல்லை என்று! போரில் வென்றேன் அவளிடம் தோற்றேன்

திருட்டு 25 - கவிதை என்னும் அட்சயப் பாத்திரம்

Image
என் கற்பனைக்  களஞ்சியத்தில் கொட்டிக் கிடக்கும் பொன்மணிகளை அள்ளி  எடுக்க கிடைத்தது ஒரு அட்சயப் பாத்திரம்!

திருட்டு 24 - வாழ்க்கைப் பாடம்

Image
பள்ளித் தேர்வில் தவறிழைத்தேன்                தேர்வில் தோல்வி ! வாழ்க்கைத் தேர்வில் தவறிழைத்தேன்                 தேர்வில் வெற்றி !

திருட்டு 23 - அண்ணே! கொஞ்சம் பொருள் வேணும்

Image
அண்ணே! கொஞ்சம் பொருள் வேணும் ... குழந்தையின் மகிழ்ச்சி குழந்தையின் மனசு இளைஞனின் உற்சாகம் இளைஞனின் கனவு கல்லூரி காதல் கல்லூரி நட்பு பண்டிகைச் சந்தோசம்  உங்கக்  கடையில கிடைக்குமா ணே எழுதி வெச்சுக்கோங்க மொத்தம் எவ்வளவு ஆச்சுன்னு பாத்து சொல்லுங்க தம்பி ... எந்தப்  பொருளும் புதுசா இல்ல  காலாவதி ஆகி நினைவுகளா  இருக்கு தரட்டுமா ?

திருட்டு 22 - முரட்டுக் குறட்டை

Image
புல்லெட் வண்டியில் புலி பயணிக்கும் ஒரு முரட்டுச் சத்தம்...                                                                      இது வரை                                                                      கேட்டது இல்லை                                                                      இப்படி ஒரு குறட்டை!                                                                      இது வரை                                                                      வெறுத்ததில்லை                                                                      எந்த குறட்டையையும்!                                                                       இன்று வெறுத்தேன்!                                                                       காது வலிக்க                                                                       இதயம் கொதிக்க                                                                       மூளை நரம்புத் தெறிக்க                                                                        க

திருட்டு 21 - சூரியன் ஒரு சோம்பேறி

Image
இரவில், கடல் போர்வைப்                    போர்த்தி அலைப் பெருமூச்சு                     விட்டு மல்லாக்காய்ப்                      படுத்து ஒரு உல்லாசத் தூக்கம்! பகலில், மேற்கை நோக்கி உலகம் சுற்றும் ஒரு உல்லாசப் பயணம்! மறுபடியும், கடல் போர்வைப்                    போர்த்தி அலைப் பெருமூச்சு                     விட்டு மல்லாக்காய்ப்                      படுத்து ஒரு உல்லாசத் தூக்கம்! சூரியன் ஒரு சோம்பேறி !

திருட்டு 20 - பயணம்

Image
இரவை நோக்கி                    பகல் பயணம் முடிவை நோக்கி                   தொடக்கம் பயணம் சாவை நோக்கி                     வாழ்வு பயணம் கவிதையை நோக்கி - என்                      திருட்டுப்  பயணம் 

திருட்டு 19 - நேரம்

Image
அவளுக்கு ஒதுக்காததால்                                       உடைந்தது காதல் அவருக்குப்  பதில் இவருக்குக் கொடுத்ததால்                      உடைந்தது பந்தம் அலட்சியமாய்ப் பார்த்ததால்                        முடிந்தது வாழ்க்கை

திருட்டு 18 - அப்பாவின் குறட்டை

Image
மேடும் பள்ளமும் ஏறும் வண்டி போல் ஒரு சத்தம் ... ஆங்காங்கே பிரேக் வேறு                    இது வரை ரசித்தது இல்லை                      என் அப்பாவின் குறட்டை                          இன்று ரசித்தேன்                             உடல் நலத்தோடு                                 அவர் தூங்கியதால்                               மருத்துவமனைப் படுக்கையில் ...                                                                    

திருட்டு 17 - தன்னம்பிக்கை

Image
நிமிர்ந்து நில் துன்பப்  புயல் வீசட்டும் இன்ப மழை திகட்டட்டும் நிமிர்ந்து நில் கனவுகள் கலையட்டும் சிறகுகள் ஒடியட்டும் நிமிர்ந்து நில்

திருட்டு 16 - பௌர்ணமி

Image
வான் பெண்ணே! உன் கணவன் என்ன கஞ்சப்பிசினியா? ஒரே ஒரு வெள்ளிப்  பொட்டு மட்டும் வாங்கித் தருகிறான் ஒரு மாதத்திற்கு .... 

திருட்டு 15 - மரங்களோடு ஒரு யுத்தம்

Image
புயலே வர்தா ! உனக்கும் மரங்களுக்கும் பூர்வ ஜென்மப்  பகையோ? ஒரே நாள் போர்த்தொடுத்து வேரோடு  சாய்த்துவிட்டாய் !

திருட்டு 14 - புயல் வர்தா

Image
எதற்காக ? இந்த காற்றுக்  கூப்பாடும் மழைக்  கண்ணீரும் 'அம்மா' இறந்ததற்கா இல்லை , வரப்போகும் ஆபத்தை எச்சரித்தா ?

திருட்டு 13 - வெட்டிப் பேச்சு

Image
நாகரிகத்தின்                        முதுகெலும்பு உறவுகளின்                         பாலம் மகிழ்ச்சியின்                          திறவுகோல்

திருட்டு 12 - மௌனம்

Image
நீ ஆழ் மனதின் எண்ணங்களைப் பாதுகாக்கும் பெருஞ்சுவராமே ! கோபத்தைத் தடுத்து நிறுத்தும்                 பேரணையாமே ! வாழ்வின் போராட்டங்களை அடக்கிக் கொள்ளும் பெருங்கடலாமே! கர்வத்தில் மிதக்காதே! மௌனமாய் இரு! உன்னைக்  கவிதையால்   திருட வருகிறேன்

திருட்டு 11 - தென்றல்

Image
என்னை அணைத்த                           முதல் காதலி எல்லாரையும் அணைக்கும்                            ஒரே காதலி பூக்களை                       முட்டும் சிநேகிதி காற்றின்,                          அமைதி அவதாரம் நீ என்னைத் தட்டிவிட்டு                    எங்கே ஓடினாய் ? நில் உன்னைக் கவிதையால்                     திருட வருகிறேன்!

திருட்டு 10 - வாழ்க்கைப் பாதை

Image
என் வாழ்வின்          திசைமாறுதே நான் நடக்கும்          பாதை மாறுதே எனின் பயணம்          மட்டும் தொடருதே ... மனக் கோட்டை          ஒன்றைக் கட்டினேன் மனம் கொண்ட          ஆசைப் பற்றினேன் அதைக் கோட்டை           எங்கும் கொட்டினேன் நிஜம் நோக்கி           மீண்டும் திரும்பினேன் மனக் கோட்டை           நிஜம் பார்க்க விரும்பினேன் நெடும் பாதை ஒன்றைத்           திட்டம் தீட்டினேன் மனக் கோட்டை நோக்கி           அதை வெட்டினேன் அய்யோ ! புயல்          ஓன்று வீசிட என் பாதை           திசை மாறிட மனக் கோட்டை           எங்கோ நின்றிட என் கனவு            கலைந்து  போனதே எனை  நிஜம்            பார்த்து நகைத்ததே என் வாழ்வின்            திசைமாறுதே நான் நடக்கும்            பாதை மாறுதே எனின் பயணம்            மட்டும் தொடருதே ...

திருட்டு 9 - இயந்திர வாழ்க்கை

Image
எழுந்தேன் காலை கடன்களை முடித்தேன் சாப்பாடு அடுக்கினேன் அலுவலகம் சென்றேன் மின்னஞ்சல் பெட்டி பார்த்தேன் வேலை செய்தேன் இணையத்தில் கவனம் இழந்தேன்  தேநீர் அருந்தினேன் மதிய உணவு உண்டேன் வேலை செய்தேன் இணையத்தில் கவனம் இழந்தேன் தேநீர் அருந்தினேன் வேலை செய்தேன் வீடு திரும்பினேன் எழுந்தேன்  காலை கடன்களை முடித்தேன்  சாப்பாடு அடுக்கினேன்  அலுவலகம் சென்றேன்  மின்னஞ்சல் பெட்டி பார்த்தேன்  வேலை செய்தேன்  இணையத்தில் கவனம் இழந்தேன்   தேநீர் அருந்தினேன்  மதிய உணவு உண்டேன்  வேலை செய்தேன்  இணையத்தில் கவனம் இழந்தேன்  தேநீர் அருந்தினேன்  வேலை செய்தேன் வீடு திரும்பினேன்  எழுந்தேன்  காலை கடன்களை முடித்தேன்  சாப்பாடு அடுக்கினேன்  அலுவலகம் சென்றேன்  மின்னஞ்சல் பெட்டி பார்த்தேன்  வேலை செய்தேன்  இணையத்தில் கவனம் இழந்தேன்   தேநீர் அருந்தினேன்  மதிய உணவு உண்டேன்  வேலை செய்தேன்  இணையத்தில் கவனம் இழந்தேன்  தேநீர் அருந்தினேன்  வேலை செய்தேன் வீடு திரும்பினேன்  ...... ...... ......

திருட்டு 8 - நுகர்வுக் கலாச்சாரம்

Image
இந்தக் குட்டி வாழ்க்கையில் கிடைத்த குட்டிப் பையில் எவ்வளவுதான் சேர்க்க? பையில் இடமில்லையே! மனமும் ஆறவில்லையே !

திருட்டு 7 - காதல் ஹைக்கூ

Image
தூரத்தில் வெண்ணிலா பக்கத்தில் என் நிலா உண்கிறோம் அடை  அவியல் 

திருட்டு 6 - உரையாடல்

Image
புதிய உறவுகளின்                           கதவு பழைய உறவுகளின்                             ஏணிப்படி -                                                   ஏறவும்                                                   இறங்கவும்                                                    கீழே விழவும் 

திருட்டு 5 - மழைக் கடவுள்

Image
காகிதக் கப்பல்                            குட்டையினில்.. வெங்காயச் செடி                             தேங்காய்ச்  சிறட்டையினில் .. மிளகாய் பஜ்ஜி                               மண்ணெண்ணை அடுப்பினில்.. அத்தனையும் , என் சிறுவன் பருவத்தில் உன்னால் படைக்கப்பட்டவை இன்று ஞாபகத்தில், கவிதையில்  அதை திருடுகிறேன் யோசித்தால்.. இந்த ஞாபகத்திற்கும் கவிதைக்கும் கூட நீயே கடவுள்

திருட்டு 4 - அந்தி மாலை - பிறப்பும் இறப்பும்

Image
கதிரவனைக் கண்டு                       பூமி நாணித் திரும்பியது பிறந்தது அந்தி மாலை இரவின் வரவுக்குத்                      தலை தாழ்ந்து வரவேற்றது இறந்தது அந்தி மாலை !

திருட்டு 3 - தேநீர் ....

Image
(முன்குறிப்பு : கடந்த ஆண்டு இதே நாள் சென்னை மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்புகுள்ளானது. இன்றும் மழை  பெய்தது  ) திருட்டு விபரம் : திருட்டு நடந்த சூழல் : நினைவுகளை நெருடிய மழை உடலினை வருடிய குளிர் திருட்டு நடந்த நாள் : 3/100 திருடியவன் : கவித்திருடன் திருட உபயோகப்படுத்தப்பட்ட கருவி: கவிதை திருடப்பட்ட பொருள் : சூடான தேநீரின் சுவை