திருட்டு 130 - காட்சிப் பிழை

 



இரு வெள்ளை வெல்லத்துண்டுகள் 

எடுத்துச் செதுக்கி 

நட்டாற் போல் 

இருக்கிறது 

இவன் கீழ் அடுக்கு 

பால் பற்கள் இரண்டும் !

ரசனை மயக்ககத்தில் 

இருந்த என் விரலை வாங்கி 

நறுக்கென 

கடித்தான் ,

தெரிந்தது 

அவை 

நங்கூரம் என்று !




Comments

Popular posts from this blog

திருட்டு 128 - மறந்தே போனேன் !

திருட்டு 129 - உறுப்பினர் பதவி