திருட்டு 127 - மருத்துவமனை பெயர் குறிப்புத் தருக

 





உணர்வுகளின் உச்சங்கள் 

உலவும் இடம் 


இங்கே இந்த மூலையில் 


அழுகை 


அடிபட்ட கணவன் 

அவசர சிகிச்சையில் 

அழுகிறாள் மனைவி 


அதோ அந்த மூலையில் 


மகிழ்ச்சி 


புதிதாய் ஒரு உயிர் 

பிறந்த கையோடு 

அப்பா அம்மா தாத்தா பாட்டி 

என பல 

உறவுகளைக் கொண்டு 

வந்த 

வரவில் 

அலைகிறது 


இதோ இந்த பக்கம் 

வலி 

அவசர சிகிச்சையில் 

அந்த 

கணவனின் வலி 


அதோ அந்தப் பக்கம் 

கவலை 


வாலிபம் புற முதுகு காட்ட 

வயோதிகம் 

கூடவே கொண்டு வந்த 

சக்கரை நோயை 

நினைத்து 

வருந்துகிறான் 

வாலிப முதியோன் 


இதோ இந்த இடுக்கில் 


சிரிப்பு 


மருத்துவமனை ஊழியர்கள்

தங்களுக்குள் 

பிடித்து விளையாடும் 

நகைச்சுவையில் 

அலைகிறது 


இங்கே இந்த இடத்தில் 


அலுப்பு 


ஒரே வேலையை காலங்காலமாய் 

செய்து 

அலுத்துப் போய் 

உர்ரென்று 

அந்த

மருத்துவ நிர்வாகியின் 

முகத்தில் 

அலைகிறது 


இங்கே இங்கே 

இந்தப் பக்கம் 

நேராக பாருங்கள் 

என்னை தான் 

என் முகத்திலும் 

உலவுகிறது பாருங்கள் 



எதிர்பார்ப்பு 


என் இரண்டாவது 

குழந்தையின் 

வருகைக்காய் 

நான் காத்திருக்கும்  

மருத்துவ அறையில் 

நுழைந்து 

என் இதயத்திலும் 

நுழைந்திருக்கிறது 


கரிசனை 

அப்பாவையும் அம்மாவையும் 

பிரிந்திருக்கும் 

என் மூத்த மகளின் 

உணர்வுகளை 

உணர்ந்தாயா

என 

கேள்வி கேட்க வந்திருக்கிறது 


உணர்வு கூடம் 

என 

பெயர் இடலாமோ 

இந்த 

மருத்துவ மனைக்கு !
















Comments

Popular posts from this blog

திருட்டு 128 - மறந்தே போனேன் !

திருட்டு 129 - உறுப்பினர் பதவி

திருட்டு 130 - காட்சிப் பிழை