திருட்டு 90 - அம்மா !


அம்மா !

வழுக்கம்பாறையில்

கிராமத்து வாசனையோடு

பிறந்தவரே !

நீங்கள் அளித்த

பிறவிக் கடனை

அடைக்க முடியாத

கடன்காரன் நான் !

கடனுக்குப் பதில்

இந்தக் கவிதையைக் காணிக்கையாய்  அளிக்கிறேன் !

சற்றும் ஈடாகாது

இருந்தாலும்

ஏற்றுக்கொள்ளுங்கள் !



தாய்ப்பால் குடிக்க

மறுத்தேன்

உங்கள் பாசப்பால்

குடித்துப்  பசி அடங்கியதால் !


சிக்கலானச் சூழலும்

உங்கள் புன்னகையை வென்றதில்லை !

 சிரியுங்கள்

நிறைய சிரியுங்கள் !

எனக்கு ஊட்டச்சத்து உங்கள் சிரிப்பு !


ஆங்கிலத்தில் நீங்கள் அடுக்கிவைக்கும்

அழகு மொழிகள்

என் ஆன்மாவிடம் கைகுலுக்கும்

அமுத மொழிகள் !


கூட்டுக் குடும்பம்

கட்டிவைத்தச் சிறையில்

குடும்பக் கூட்டைக்

காத்தத் துணைவி நீங்கள் !


தன் சுகம் துறந்தத் துறவி!


உங்கள் எளிமைக்குள்

ஒளிந்திருக்கும் மனதைரியத்தை

வியக்கிறேன் !


என் உடலும் உள்ளமும் நலம்தானா

என மணித்துளி ஒவ்வொன்றும்

 நினைக்கும் அக்கறைத் தெய்வமே !


வாழ்க்கையை

நீங்கள்

படிக்கும் முறையை

ரசிக்கிறேன் !


 முதுமை மீது

எனக்குக் கோபம்

உங்கள் இளமையை

அது பறிப்பதால் !

பரவாயில்லை

மனதளவில் இன்னும்

நீங்கள் குமரி தான் !

முதுமை தீண்டாத

இளங்குமரி !


இந்தக் கவிதை போதாது

உங்களை வர்ணிக்க !

இருந்தும்

இந்தக் கவிதையைக் காணிக்கையாய்  அளிக்கிறேன் !

சற்றும் ஈடாகாது

இருந்தாலும்

ஏற்றுக்கொள்ளுங்கள் !


 அம்மா 

ஐ லவ் யூ !



Comments

Popular posts from this blog

திருட்டு 135 - நம்பிக்கைத் துரோகி

திருட்டு 134 - ஆத்தூரில் மியாவ்

திருட்டு 130 - காட்சிப் பிழை