திருட்டு 131 - மழையின் மொழி

 



அடித்துப் பெய்கிறது 

மழை !

காரில் என் மகளை 

பள்ளியில் விட்டு வருகிறேன் 

வகுப்பு வாசல் வரை 

குடை பிடித்து

ஒரு துளி மழை கூட 

தீண்டாமல் 


வழியில் 

ஒரு சிறுவன் 

ஒற்றைக் கையில் குடையுடன் 

ஒற்றைக் கையால் 

மிதி வண்டி பிடித்து 

மிதித்து 

பள்ளிக்குச் செல்கிறான் 


நகர்கிறேன் 

காரில் 

மழையில் நனையாமல் 


மீண்டிம் வழியில் 

ஒரு சிறுமி 

மொத்தமாய் 

மழையில் நனைந்து 

உற்சாகமாய் 

செல்கிறாள் பள்ளிக்கு 

சொந்தமாய் மழையை அரவணைத்து!


மழை பேசும் மொழி ஒன்றுதான் 

மழையோடு 

இவர்கள் பேசும் மொழி ?



Comments

Popular posts from this blog

திருட்டு 135 - நம்பிக்கைத் துரோகி

திருட்டு 134 - ஆத்தூரில் மியாவ்

திருட்டு 130 - காட்சிப் பிழை